internet

img

அமேசான் நிறுவனத்தின் வலைத்தள பக்கத்தில் பதிவாகியிருந்த 54 கோடி பயனாளர்களின் தகவல் நீக்கம்

பயனாளர்களின் தகவல் பாதுகாப்பை முன்னிட்டு சமூக வலைத்தள நிறுவனம் முகநூல் 54 கோடி பயனாளர்களின் தகவல்களை அமேசான் நிறுவனத்தின்(Amazon.com's AWS cloud severs) வலைத்தள பக்கத்திலிருந்து நீக்கியது.


அப்கார்டு(UpGuard) என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கோடிக்கணக்கான முகநூல் பயனாளர்களின் தகவல்கள் அமேசான் நிறுவனத்தின் வலைத்தளத்தின் சேமிப்பு பகுதியில் பதிவாகியிருந்ததை கண்டறிந்தது. மெக்ஸிகோவைச் சேர்ந்த செய்தி நிறுவனமான கல்சுரா கலெக்டிவா(cultura colectiva) அமேசான் நிறுவனத்தின் S3 சேமிப்பு பகுதியில் 54 கோடி முகநூல் பயனாளர்களின் அடையாள எண், கணக்கின் பெயர்கள் எழுத்து பதிவுகள் உள்ளிட்ட தகவல்களை சேமித்ததை அப்கார்டு நிறுவனம் கண்டறிந்தது.


இதையடுத்து, தற்போது முகநூல் பயனாளர்கள் 54கோடி பேர்களின் தகவல்கள் பாதுகாப்பிற்காக அமேசான் நிறுவனத்தின் சேமிப்பு பகுதியிலிருந்து முகநூல் நிறுவனம் நீக்கியுள்ளது.


;